Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விவேகமான கடன் திட்டங்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு அறிவுரை

விவேகமான கடன் திட்டங்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு அறிவுரை

விவேகமான கடன் திட்டங்களையும், திறமையான பண மேலாண்மை நடைமுறைகளையும் மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

மாநிலங்களின் நீண்டகால நிதி ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, விவேகமான கடன் திட்டங்களையும், திறமையான பண மேலாண்மை நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.

மும்பையில் நடந்த மாநில நிதிச் செயலர்களின் 36-வது மாநாட்டில் அவர் பேசியதாவது:

மாநிலங்களின் நீண்டகால நிதி ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, செலவினங்களின் தரத்தைப் பராமரிப்பது முக்கியம். விவேகமான கடன் திட்டங்களையும், திறமையான பண மேலாண்மை நடைமுறைகளையும் மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவை (எஸ்எல்பிசி) மாநிலங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த கடன் வழங்கல் தளத்தில் (யுஎல்ஐ) இணைய வேண்டும். நரடிப் பயன் பரிமாற்றங்களுக்கு, நிரலாக்க வசதி கொண்ட மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும், என்றார்.

மாநிலங்களின் சந்தைக் கடன்கள், ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால நிதி வசதிகள், தரநிலை கடன் பத்திர வெளியீட்டு உத்தியைப் பின்பற்றுவது ஆகியவை மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டன.

மாநில அரசுகளுக்கான பண மற்றும் கடன் மேலாண்மை குறித்த கையேட்டையும் ஆளுநர் வெளியிட்டார். இந்த மாநாட்டில் 27 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களின் நிதிச் செயலர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி
இந்தியா முக்கிய ஏற்றுமதியாளராக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை
அடுத்த செய்தி
ரூ.2.12 லட்சம் கோடி திட்டங்களால் பாதுகாப்புத்துறை பங்குகள் உயர்வு

தொடர்புடைய செய்திகள்